லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் ஹெஸ்பொல்லா முகாம்கள் தகர்ப்பு

Date:

காசாவில், உணவகம் மற்றும் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், இரண்டு குழந்தைகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேல் மோதல் நடக்கிறது. இதில், காசாவில் பெண்கள், குழந்தைகள் என, 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

மற்றொரு மேற்காசிய நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ், ஹெஸ்பொல்லா அமைப்புகளின் முக்கிய தளபதிகளை சுட்டுக் கொன்றது. இந்த அமைப்புகளுக்கு ஆதரவாக, ஈரானும் களத்தில் குதித்து இஸ்ரேலை தாக்கியது.

பதிலுக்கு, இஸ்ரேலும் ஈரானை தாக்கியது. மும்முனை தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள்கிறது. நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது 90 ராக்கெட்டுகளை வீசி ஹெஸ்பொல்லா தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லெபனானின் பெய்ரூட்டில் உள்ள தஹியே என்ற பகுதியில், இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஹெஸ்பொல்லாவின் முகாம்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதே போல், காசாவின் முவாசி என்ற பகுதியில் உள்ள உணவகம் மீது, இஸ்ரேல் ராணுவத்தினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து, மத்திய காசாவில் அகதிகள் முகாமில் உள்ள வீட்டில் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில், பெண் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் – ஹமாஸ், ஹெஸ் பொல்லாமோதலால், மேற்காசிய பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....