மொரீஷியஸ் பிரதமராகிறார் நவீன் ராம்கூலம் மோடி வாழ்த்து

Date:

மொரீஷியசில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், டாக்டர் நவீன் ராம்கூலம், 77, தலைமையிலான எதிர்க்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

இந்திய பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடு மொரீஷியஸ். இங்கு, மொத்தம் உள்ள 70 உறுப்பினர்களில், 62 பேரை மக்கள் தேர்வு செய்வர்.

இந்நிலையில், அந்நாட்டின் பார்லிமென்ட் தேர்தல் கடந்த 10ம் திகதி நடந்தது. ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், உடனே ஓட்டுகள் எண்ணப்பட்டன.

இதில், கடந்த இரண்டு முறை நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூக உடைமை இயக்கம், இம்முறை பெரும்பான்மை இடங்களில் தோல்வியைத் தழுவியது.

பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சி – பார்டி டிராவைலிஸ்ட் மற்றும் மொரீஷியசின் ஆயுதப்படை இயக்கம், நோவியாவ் ஜனநாயகம் கட்சியினர் அடங்கிய கூட்டணி, இதுவரை முடிவுகள் வெளியான 60 இடங்களையும் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதன் வாயிலாக, மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக நவீன் ராம்கூலம் மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார்.

இதையடுத்து, நவீன் ராம்கூலமிற்கு நம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்ததுடன், மொரீஷியஸ் நாட்டுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....