அணிவகுப்பு நிகழ்ச்சியில் யானைகள் படும் துயரம்

Date:

அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் யானையின் வாழ்க்கை, யூதர்களை ஒழிப்பதற்காக போலந்தில் ஜெர்மானியர்களால் கட்டப்பட்ட முகாம் போல் உள்ளது. வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கேரளா ஐகோர்ட் தடை விதித்தது.

கேரளாவில் நடக்கும் அணிவகுப்பில், யானைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து கேரளா ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயசங்கரன், கோபிநாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* அணிவகுப்பு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் யானையின் வாழ்க்கை, யூதர்களை ஒழிப்பதற்காக போலந்தில் ஜெர்மானியர்களால் கட்டப்பட்ட முகாம் போல் உள்ளது.

* யானைகளை அணிவகுப்பு நிகழ்ச்சியில், பயன்படுத்தும் போது கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

* உடற்தகுதி சான்றிதழ்களை அரசு கால்நடை டாக்டர் மட்டுமே வழங்க வேண்டும்.

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொது சாலைகளில் யானைகள் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை.

* யானையை ஒரு நாளில் 125 கி.மீ.க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது. ஒரு நாளில் எந்த யானையையும் வாகனத்தில் 6 மணி நேரத்திற்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது.

* இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை யானையை வாகனங்களில் ஏற்றிச் செல்லக் கூடாது.

* இரண்டு யானைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 3 மீட்டர் தூரம் இருக்க வேண்டும்.

*வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கூடாது என கேரளா ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....