உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெலபேவ பிரதேசத்தில் வைத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 24 வயதுடைய மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பன்பொல பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் குறிப்பிட்டனர்.




