இதை எப்படி செய்வது என உனக்கு தெரியுமா?

Date:

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மனித உருவ ரோபோவை வடிவமைத்துள்ளார். ஆப்டிமஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை அமெரிக்காவை சேர்ந்த “பிரபல கோடீஸ்வர பெண், சோசியலிட், மாடல், நடிகை, தொழிலதிபர்,என பன்முகதன்மை கொண்ட கிம் கர்தாஷியன் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிமுகம் செய்தார்.

மேலும் அந்த ரோபோவுடன் உரையாடி, விளையாடிய காட்சிகளை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது வீடியோ வைரலாகி கோடிக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது. அந்த வீடியோவில், கிம் கர்தாஷியன் தனது ரசிகர்களுக்கு தனது புதிய நண்பர் எனக்கூறி ஆப்டிமஸ் ரோபோவை அறிமுகம் செய்கிறார். பின்னர் அந்த ரோபோவுடன் கலந்துரையாடிய அவர் அதனுடன் ராக்- பேப்பர்- சிசர்’ விளையாடுவது போன்ற காட்சிகள் பயனர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் ஆப்டிமஸ் ரோபோ ‘ராக்- பேப்பர்- சிசர்’ விளையாடிய போது அதன் கைகளை உயர்த்தி சம்மதம் தெரிவிக்கிறது. தொடர்ந்து கிம் கர்தாஷியன் ரோபோவை கிண்டல் செய்கிறார்.

அப்போது அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில் ரோபோ லவ் சிம்பல் காட்டியது. உடனே கிம் கர்தாஷியன் ஆச்சரியத்தில் திகைத்து இதை எப்படி செய்வது என உனக்கு தெரியுமா? என ஆச்சரியமாக கேட்கிறார். இந்த வீடியோவை பயனர்கள் பலரும் ஆப்டிமசின் திறமையை கண்டு வியந்து பகிர்ந்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....