ஐபிஎல்லின் ‘சிங்கக்குட்டி’.. 13 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான்

Date:

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட மிக இளம் வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த 13 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது. வைபவ் சூரியவன்ஷி-க்கு அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்மூலம் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதற்கு பிறகு பிறந்து, அதில் விளையாட தேர்வான முதல் வீரர் என்ற பெருமையை 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....