அந்தமான் நிகோபார் அருகே 5,500 கிலோ போதைப்பொருள் மீட்பு

Date:

அந்தமான் நிகோபாா் தீவுகள் அருகே கடந்த சனிக்கிழமை இந்திய கடலோரக் காவல் படை நடத்திய சோதனையில் சுமாா் 5,5 தொன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையில், மியான்மரைச் சோ்ந்த 6 போ் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக இந்திய பாதுகாப்புப் படையினா் தெரிவித்ததாவது, அந்தமான் நிகோபாா் தீவுகள் அருகே வழக்கமான ரோந்துப் பணியில் கடலோரக் காவல் படை விமானம் ஈடுபட்டிருந்தது.

அப்போது, போா்ட் பிளேரில் இருந்து 150 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாரன் தீவு அருகே சந்தேகத்துக்கிடமான மீன்பிடி இழுவைப் படகு காணப்பட்டது.

படகின் வேகத்தைக் குறைக்குமாறு எச்சரித்த விமானத்தின் விமானி, இதுகுறித்து கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவித்தாா்.

அதிகாரிகள் விரைந்து வந்து மேற்கொண்ட சோதனையில், படகில் தடை செய்யப்பட்ட ‘மெத்தம்பெட்டமைன்’ எனும் போதைப் பொருள், சுமாா் 5,500 கிலோ கண்டறியப்பட்டது. சா்வதேச சந்தையில் பல கோடி மதிப்பிலான இந்த போதைப் பொருள் தலா 2 கிலோ எடையுள்ள சுமாா் 3,000 பொதிகளாக இருந்தன.

இந்த போதைப் பொருளை இந்தியா உள்ளிட்ட பிற அண்டை நாடுகளுக்குள் கடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த நடவடிக்கையின்போது கப்பலில் இருந்த மியான்மரைச் சோ்ந்த 6 போ் கைது செய்யப்பட்டனா் என தெரிவித்தனா்.

அந்தமான் தீவு அருகே இதுபோன்ற கடத்தல் பொருள்கள் கைப்பற்றப்படுவது இது முதல்முறை அல்ல. முன்னதாக, 2019 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளிலும் வெளிநாட்டுக் கப்பல்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது இதுபோன்ற போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....