நோட்ரே-டேம் கத்திட்ரேல் தேவாலயத்தின் கோபுரம் முற்றாக இடிவு!

Date:

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி ஏற்பட்ட தீப்பரவலால் பாரிய அழிவிற்கு உட்பட்ட நோட்ரே-டேம் கத்திட்ரேல் (Notre-Dame cathedral) தேவாலயத்தின் கோபுரம் மற்றும் கூரை என்பன முற்றாக அழிந்து போயுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக 19 ஆம் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோபுரம் முற்றாக இடிந்து வீழ்ந்தது.

அந்த காலகட்டத்தில் தீயை அணைப்பதற்கு 600 தீயணைக்கும் படைத்தரப்பினர் 15 மணி நேரம் போராடி மிகுந்த சிரமத்திற்கு பின்னர் தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

நோட்ரே – டேமின் புதுப்பிக்கப்பட்ட உட்புறம் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

70 கோடி யூரோ செலவில் தேவாலயம் புதுப்பித்தலின் முன்னேற்றத்தைக் குறிக்கும் சில புகைப்படங்கள் மட்டுமே பல ஆண்டுகளாக வெளியிடப்பட்டன.

புதுப்பிக்கப்பட்ட தேவாலயம் மீண்டும் டிசெம்பர் 7 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தனது பாரியார் மற்றும் பாரிசுக்கான பேராயர் சகிதம் தேவாலயம் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் 1786 ஆம் ஆண்டில், பிரெஞ் புரட்சிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் புனித கிரிஸ்டோபரை சித்தரிக்கும் 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றின் போது மிகப்பழைமை வாய்ந்த பிரமாண்டமான சிலை ஒன்று அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....