உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக குசல் மெண்டிஸ் 158 ஓட்டங்களை விளாசியுள்ளார்.
87 பந்துகளில் 9 ஆறு ஓட்டங்கள் மற்றும் 19 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி தற்போது வரை 32 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.