குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

Date:

பதுளை – லுணுகலை பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

லுணுகலை – அடாவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் நால்வர் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு முற்பட்ட தொழிற்சாலை ஊழியர் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இதன்படி, 29 வயதுடைய ஆணொருவரும், 40 முதல் 56 வயதுக்கிடைப்பட்ட நான்கு பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவரும் லுணுகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....