‘தி ராஜா சாப்’ படத்தின் டீசர் அப்டேட்

Date:

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவந்த பிரபாஸ், ‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி ரூ.1,110 கோடிக்கும் மேல் கடந்து வசூல் செய்து சாதனை படைத்த ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படத்தை அடுத்து, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் ‘தி ராஜா சாப்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் திகதி திரைக்கு வர உள்ளது.

இந்தநிலையில், இப்படத்தின் டீசர் குறித்ம அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.அதன்படி ‘தி ராஜா சாப்’ படத்தின் டீசர் வருகின்ற டிசம்பர் மாதம் 25-ம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகையில் ஸ்பெஷலாக வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக நடிகர் பிரபாஸ் “ஸ்பிரிட், சலார் 2” ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....