போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே… இஸ்ரேல் மீது முதன்முறையாக ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

Date:

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே நடந்து வரும் மோதலில் பலர் உயிரிழந்து உள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் லெபனானில் 3,800-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை லெபனானின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டார். லெபனானில் நடந்து வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்பு கொண்டது.

எனினும், ஒப்பந்த மீறலில் ஹிஸ்புல்லா ஈடுபட்டால், ஆயுதங்களை கையிலெடுக்க அவர்கள் முற்பட்டால், நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை வெளியிட்டார். இந்த சூழலில், இஸ்ரேல் விதிமீறலில் ஈடுபட்டு விட்டது என ஹிஸ்புல்லா அமைப்பு கூறியது.

இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல், லெபனான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் எல்லையையொட்டி அமைந்த இஸ்ரேலின் வடக்கே மவுண்ட் டோவ் பகுதி மீது ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று 2 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

கடந்த புதன்கிழமை காலையில் போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நிலையில், முதன்முறையாக ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ள ஹிஸ்புல்லா, இதனை இஸ்ரேலுக்கான எச்சரிக்கை என தெரிவித்து உள்ளது.

பெய்ரூட் நகர் மீது இஸ்ரேலின் கண்காணிப்பு விமானங்கள் பறந்தன. இதனால், போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறலில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது என அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூறி வந்த நிலையில், இந்த ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

ஆனால், இஸ்ரேல் வெளியுறவு மந்திரி கிதியோன் சார் கூறும்போது, ஹிஸ்புல்லாவின் விதிமீறலுக்கு பதிலடியாகவே, தேவையான உடனடி நடவடிக்கையாக, ஒப்பந்தம் அமலாகும் வகையில் இஸ்ரேல் பணியாற்றி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கூறுவதென்றால், தெற்கு லெபனானில் ஆயுதமேந்திய ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டபோதோ அல்லது ஆயுத பரிமாற்ற முயற்சிகள் நடைபெறும்போதோ உடனடி நடவடிக்கை தேவையாக உள்ளது என கூறினார்.

இதேபோன்று, லிடானி ஆற்றுக்கு வடக்கே தன்னுடைய படைகளை ஹிஸ்புல்லா அமைப்பு நகர்த்த வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கும் என பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு மந்திரி ஜீன் நோயல் பேரட்டுக்கு, கிதியோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....