சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

குருணாகல் ஹெட்டிபொல பகுதியில், அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாகத் தொடர்ந்தும் 81 நலன்புரி நிலையங்களில் 8,377 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக 470,094 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

இதன்படி, அந்த மாவட்டத்தில் மாத்திரம் 162,092 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மதுரங்குளி – கஜூவத்த பகுதியிலுள்ள இடமொன்றில் தடைப்பட்டிருந்த வடிகான்களை சுத்தப்படுத்தும் போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இடமொன்றின் உரிமையாளர் மற்றும் பிரதேச மக்களுக்கு இடையே அமைதியின்மை ஏற்பட்டது.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல்துறையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, பிரதேச மக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே அமைதியின்மை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், முந்தல் காவல்துறையின் மேலும் சில அதிகாரிகள் பிரவேசித்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....