நாடாளுமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள குளிரூட்டியில் இன்று (04) காலை தீ விபத்து ஏற்பட்டது.
அதன்படி, அதனை உடனடியாக அணைப்பதற்கு நாடாளுமன்ற ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று விவாதம் இடம்பெற்று வருகின்றதுடன், நாடாளுமன்ற செயற்பாடுகள் இரவு 09.30 மணி வரை நடைபெறவுள்ளது.




