நாசா தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் நியமனம்

Date:

அமெரிக்காவில் கடந்த 5-ம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து, பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை அவர் நியமித்து வருகிறார். அவற்றில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன உரிமையாளர் மற்றும் உலக பணக்காரரான எலான் மஸ்க்கும் இடம் பெற்றுள்ளார்.

இதன்படி பாதுகாப்பு, வீட்டு வசதி, விவசாயம், தொழிலாளர் துறை, தேசிய சுகாதார மைய இயக்குநர் மற்றும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு டிரம்ப், நபர்களை நியமனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (நாசா அமைப்பு) அடுத்த தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் என்பவரை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் நியமித்து உள்ளார். ஷிப்ட்4 என்ற ஆன்லைன் பணபரிமாற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அவர் கோடீசுவரராவார்.

இதுபற்றி டிரம்ப் கூறும்போது, ஒரு நிறைவான வர்த்தக தலைவர், ஏழை பங்காளர், விமானி மற்றும் விண்வெளி வீரரான ஜாரெட் ஈசாக்மேனை நாசாவின் நிர்வாகியாக நியமிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாசா அமைப்பின் கண்டுபிடிப்பு மற்றும் உந்துதல், விண்வெளி அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றில் அளப்பரிய சாதனைகளுக்கான வழிகளை ஏற்படுத்துவது மற்றும் கற்று கொள்வது ஆகியவற்றை ஜாரெட் வழி நடத்தி செல்வார் என கூறியுள்ளார். ஜாரெட் அவருடைய மனைவி மோனிகா மற்றும் அவர்களுடைய குழந்தைகள் மிலா மற்றும் லிவ் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்பின் இந்த நியமன அறிவிப்புக்கு ஈசாக்மேன் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். மனித வரலாற்றில் மிக சிறந்த சாதனை படைப்பதில் முன்னணியில் திகழும் நாடாக அமெரிக்காவை வழி நடத்துவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன் என கூறியுள்ளார். டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான எலான் மஸ்க்குடன் விரிவான நிதி சார்ந்த தொடர்பை ஈசாக்மேன் வைத்திருக்கிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....