இணையவழி நிதி மோசடி – 13 வெளிநாட்டு பிரஜைகளை CIDயில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

Date:

இணையவழி மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளில் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாட்டில் தங்கியுள்ள 13 வெளிநாட்டுப் பிரஜைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு மாதமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவர்களுக்குக் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் மூன்று அநாமதேய நிறுவனங்களில் விசா பெற்று இலங்கைக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்களில் பதினொரு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக அவர்களைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலங்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படாமையால், மீண்டும் உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....