ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Date:

8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் பாகிஸ்தான், இந்தியா (ஏ பிரிவு), இலங்கை , வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை – இந்தியா அணிகளும், மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளும் மோதின. இதில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், வங்காளதேச அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பர்ஹான் யூசுப் 32 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் இக்பால் ஹொசைன் எமன் 4 விக்கெட் வீழ்த்தினார்.


தொடர்ந்து 117 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேசம் 22.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 120 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 8ம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியில் வங்காளதேசம் – இந்தியா அணிகள் துபாயில் மோத உள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....