சட்டவிரோத தங்க சுரங்கத்திற்குள் சிக்கிய 6 பேர் பலி

Date:

தென் ஆப்பிரிக்காவின் ஸ்டில்போன்டைன் என்ற இடத்தில் மூடப்பட்ட சட்டவிரோத தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சட்டவிரோத தங்க சுரங்கத்திற்குள் தங்கம் எடுப்பதற்காக ஏராளமான சுரங்க தொழிலாளர்கள் அங்கு சென்றுள்ளனர். சுரங்கத்திற்குள் சென்ற அவர்கள் எதிர்பாராத விதமாக உள்ளே சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சுரங்கத்திற்குள் சிக்கியிருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டவர்களில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டதாக தென் ஆப்பிரிக்கா போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களது உடல்களை மீட்டுள்ள போலீசார், மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால் இந்த எண்ணிக்கை நூற்றுக்கணக்கானதாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....