தரமற்ற மருந்துகள் குறித்த அரசாங்கம் விளக்கமளிப்பு

Date:

தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பினால் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் நேற்று (06) தெரிவித்தார்.

தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் (05) செய்தித்தாள்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;

” தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தான் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் வினைத்திறனற்ற நிலை காணப்படுகின்றது. தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் அவ்வாறு கூறும் விதமாக தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக செல்லவில்லை. தரத்தின் தன்மை தொடர்பாக பிரச்சினை இருப்பின் அது அறிவிக்கப்படும்.

இது தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெளிவுபடுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....