மியன்மார் இணையவழி மோசடி முகாமில் மேலும் 14 இலங்கையர்கள் – அமைச்சர் விஜித ஹேரத்!

Date:

மியன்மாரில் உள்ள இணையவழி மோசடி முகாமில் மேலும் 14 இலங்கையர்கள் உள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (06) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதியில் சிக்கியிருந்த பலர் ஏலவே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த பிரச்சினை தொடர்ந்தும் நீடித்துச் செல்கின்றது. இலங்கையிலிருந்து பலர் வெவ்வேறு வழிகளின் ஊடாக மியன்மாருக்குத் தொடர்ந்தும் செல்கின்றனர்.

அங்குள்ள சில பகுதிகளை உத்தியோகப்பூர்வமற்ற இராணுவ தரப்பினர் கட்டுப்படுத்துகின்றனர்.

இந்தநிலையில் அங்குள்ளவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம், இவ்வாறான மனித கடத்தல்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....