இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.
போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் ரிஷப் பண்ட் 28 ஓட்டங்களையும், நிதிஷ்குமார் ரெட்டி 15 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 180 ஓட்டங்களையும், அவுஸ்திரேலிய அணி 337 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.




