வடிவேல் சுரேஷை  வௌியேற்றுமாறு எச்சரிக்கை

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஹாலிஎல உனுகொல்ல பங்களாவை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரை உடனடியாக அங்கிருந்து வௌியேற்றுமாறு உனுகொல்ல தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (10) நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் தெரிவித்தார்.

வடிவேல் சுரேஷை அங்கிருந்து வௌியேற்றாமல், அநீதியாக செயற்பட்டால் தோட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானும் டிக்வெல்ல தோட்டத்தில் உள்ள பங்களா ஒன்றில் 13 வருடங்களாக பலவந்தமாக தங்கியிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான பதுளை மாவட்டத்தில் காணி விநியோகத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இதுவாகும்.

இதேவேளை, மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க தலா 28 இலட்சம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய உதவியின் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதன்போது தெரிவித்தார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் அனைத்து பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....