ரஷிய அதிபர் புதினுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு

Date:

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 3 நாள் அரசு முறை பயணமாக ரஷியா சென்றுள்ளார். அங்கு அவர் நேற்று தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்தியா-ரஷியா ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்துக்கு பின் ராஜ்நாத் சிங், ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின்போது ராஜ்நாத்சிங் “நமது நாடுகளுக்கிடையேயான நட்புறவு மிக உயர்ந்த மலையை விட உயர்ந்தது மற்றும் ஆழமான கடலை விட ஆழமானது. இந்தியா தனது ரஷிய நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். எதிர்காலத்திலும் இது தொடரும்” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....