சபாநாயகர் அசோக ரன்வல குறிப்பிடுவதைப் போன்று அவர் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா என்பது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அசு மாரசிங்க இன்று (11) இணையத்தளத்தில் சோதனை மேற்கொண்டார்.
ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்தில் சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதி பட்டம் பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அதன் தகவல்களைத் தேடுவதற்காக பேராசிரியர் ஆஷு மாரசிங்க இன்று ஊடகங்களுக்கு முன்பாக மேற்படி பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்திற்கு விஜயம் செய்தார்.
அங்கு சபாநாயகரின் பெயரைக் பதவு செய்து, குறித்த பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் தேடுதல் மேற்கொண்ட நிலையில், அது தொடர்பில் தரவு அமைப்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
எனவே, தனது கலாநிதி பட்டத்தின் நம்பகத்தன்மை தொடர்பான தகவல்களை சபாநாயகர் அசோக ரன்வல முன்வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




