உள்நாடு மற்றும் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.
நொச்சியாகம-ரனோராவ பிரதேசத்தில் அனுராதபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த இருவேறு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேநபர்கள் 33 மற்றும் 34 வயதுடைய தலாவ மற்றும் காலதிவுல்வெவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.




