அஸ்வெசும திட்டத்தின் டிசம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு இன்று!

Date:

இந்த மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 177,311 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவு வரவு வைக்கப்படவுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவுக்காக ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முடிவடையவிருந்த 4 இலட்சம் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான நலன்புரி நன்மைகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முடிவடையவிருந்த மேலும் 4 இலட்சம் பயனாளிகளுக்கான நலன்புரி நன்மைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....