சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – மொட்டுக் கட்சி அறிவிப்பு!

Date:

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர தீர்மானித்துள்ளதாகப் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

சபாநாயகர் கலாநிதி பட்டம் மற்றும் பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளதாகக் காட்டி மக்களை ஏமாற்றியுள்ளார்.

எனவே சபாநாயகர் கல்வித் தகைமையைக் காட்டி மக்களை ஏமாற்றியிருந்தால் அவர் பதவி விலக வேண்டும்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றக் குழுவின் ஊடாக சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளோம்.

இதற்கு முழு எதிர்க்கட்சியினரும், அரசாங்கத்தின் மனசாட்சியுள்ள உறுப்பினர்களும் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....