இரத்தினபுரி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Date:

இரத்தினபுரியில் நாளை (13) ஏற்படக்கூடும் போக்குவரத்து இடையூறு குறித்து பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் 14ஆம் திகதி சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகவுள்ளதால், பெல்மடுல்ல கல்பொத்தாவல விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன் தெய்வத்தின் திருவுருவச் சிலை, புனித கலசம் மற்றும் தெய்வ ஆபரணங்களை இன்று (12ஆம் திகதி) பொதுமக்கள் வழிபடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் நாளை (13ம் திகதி) கலப்போத்தாவல ரஜமஹா விகாரையிலிருந்து இரத்தினபுரி பலாபத்தல வீதியில் மற்றும் குருவிட்ட எரத்ன வீதியில் இருந்து சிவனொளிபாதமலை உச்சி ஊர்வலமாக வரை எடுத்துவரப்படவுள்ளது. 

இதன்காரணமாக  ஏ-04 பிரதான வீதியில் பெல்மடுல்லயிலிருந்து இரத்தினபுரி புதிய நகரம் வரையில் நாளை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த காலப்பகுதியில் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சாரதிகளுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....