என்னை நேசித்த நாட்டு மக்களுக்கு நன்றி

Date:

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. முடிவில் இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்று வந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்த போட்டி இன்று பிற்பகலில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. தொடக்கம் முதலே இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், டிராவை நோக்கியே போட்டி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் சற்றும் எதிர்பாரா வகையில், 58-வது நகர்த்தலில் ட்ங் லீரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் தமிழக வீரரான குகேஷ் உலக சாம்பியன் ஆனார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.

வெற்றிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், “போட்டிக்கு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன். இரண்டு வருட தீவிர பயிற்சிக்கு பின் கிடைத்த வெற்றி இது. ஒரு இளம் செஸ் வீரனின் கனவு எதுவோ அது நிறைவேறி உள்ளது.

10 வருட பயிற்சியின் விளைவாக இந்த சாதனையை படைத்துள்ளேன். சாம்பியன் பட்டத்தை மீண்டும் கொண்டு வரக்கூடிய நபராக இருக்க விரும்பினேன். 11 ஆண்டுகளுக்கு முன் சாம்பியன் பட்டம் இந்தியாவுடன் பறிக்கப்பட்டது. தற்போது உலக சாம்பியன் ஆன மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். லீடன் தோல்வி அடைந்ததற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நேசித்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன்” என்று அவர் கூறினார்.

உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வெற்றி பெற்றுள்ள குகேசுக்கு இந்திய மதிப்பில் ரூ. 20.8 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....