உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியா சென்றுள்ளதன் காரணமாக 5 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக, பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திராவும், பதில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக, பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவும், பதில் பாதுகாப்பு அமைச்சராகப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக, பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும், பதில் தொழில் அமைச்சராக, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




