வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடர்; வங்காளதேச அணியில் நஹித் ராணா சேர்ப்பு

Date:

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடருக்கான வங்காளதேச அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடருக்கான வங்காளதேச அணியில் வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேச அணி விவரம்: லிட்டன் குமார் தாஸ் (கேப்டன்), சவுமியா சர்கார், தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமோன், ஆபிப் ஹொசைன், மெஹதி ஹசன் மிராஸ், ஜாக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன் பட்வாரி, ஷேக் மெஹதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் சகிப், ஹசன் மஹ்மூத், ரிப்பன் மொண்டோல், நஹித் ராணா.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....