ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு – தொடர்ந்தும் விளக்கமறியல்

Date:

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை பிரேம் தக்கரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டி, பல்லேகலயில் நடைபெற்று வரும் லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கட் போட்டியில் தனது அணியின் வீரர் ஒருவருக்கு ஆட்ட நிர்ணய ஆலோசனை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, ​​இந்தக் குற்றம் தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127வது பிரிவின் கீழ் ரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி உரிய இரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் அதுவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....