சாரதியைக் காட்டுக்குள் தள்ளி முச்சக்கரவண்டியைக் கடத்திய நபர்கள்!

Date:

கம்பளை நகரில் இருந்து அம்புலாவ பகுதிக்குச் செல்வதற்காக இரு நபர்கள் முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். 

இதன்போது அம்புலாவ கல்பங்கலாவ என்ற பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி சாரதியின் கழுத்தை நெரித்துப் பின்பு அவரை அடித்துக் காட்டுப் பகுதியில் தள்ளிவிட்டு முச்சக்கரவண்டியை கடத்திக் கொண்டு சென்றுள்ளனர். 

இந்நிலையில், அம்புலாவ பகுதியில் இருந்து எம்மாத்தகம பகுதியை நோக்கிச் சென்ற குறித்த முச்சக்கரவண்டி, எம்மாத்தகம பகுதியிலிருந்து அம்புலாவ பகுதிக்கு வந்த மகிழுந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதனால், முச்சக்கரவண்டியை கடத்திச் சென்ற இரு சந்தேக நபர்களும் அந்தப் பகுதியில் உள்ள காட்டுக்குள் பாய்ந்து தலைமறைவாகியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து அப்பிரதேச மக்கள் இரவு முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டு இரு சந்தேக நபர்களையும் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இரு சந்தேக நபர்களும் 23 மற்றும் 25 வயதுக்கு உள்பட்ட, கம்பளை எத்கால்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....