யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக 99 பேர் பாதிப்பு!

Date:

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த நோய் காரணமாக 7 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. 

எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான மருந்துகளை வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. 

நேற்றுவரை சுமார் 6,000 பேருக்குத் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள நோயாளர்களை அடையாளங் காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இந்த கிருமித்தொற்று உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காகக் கொழும்பு – கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு நாளை வருகை தரவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....