ஆப்பிரிக்கா நாட்டை புரட்டிப்போட்ட ‘சிடோ புயல்’

Date:

இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. ‘சிடோ’ என பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த சில நாட்களாக கிழக்கு ஆப்பிரிக்கா அருகே கடலில் நிலை கொண்டது. இதனால் மலாவியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு ஊருக்குள் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் அண்டை நாடான மொசாம்பிக்கையும் ‘சிடோ’ புயல் தாக்கியது. இதனால் அங்கு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் 34 பேர் உயிரிழந்தனர். 300 பேர் படுகாயம் அடைந்தனர். 24 ஆயிரம் வீடுகள், 150 மீன்பிடி படகுகள் சேதம் அடைந்தன.

தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இந்த ஆண்டு வறட்சியால் தத்தளித்துக்கொண்டிருந்தநிலையில், இந்த புயல் ஆயிரக்கணக்கான மக்களை பட்டினியில் தவிக்க விட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....