எல்லை தாண்டி வந்த 84 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷிய ராணுவம்

Date:

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய ராணுவம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு போரிட்டு வருகிறது.

இந்த நிலையில், ரஷியாவின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைன் நாட்டின் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று இரவு ரஷியாவின் எல்லைக்குள் டிரோன்கள் மூலம் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான உக்ரைனின் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது

ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம், எல்லை தாண்டி வந்த 84 உக்ரைன் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் 36 டிரோன்கள் ராஸ்டோவ் பகுதியிலும், 21 டிரோன்கள் பிரையன்ஸ்க் பகுதியிலும், 14 டிரோன்கள் பெல்கோராட் பகுதியிலும், 6 டிரோன்கள் வோரோனெக் பகுதியிலும், தலா 3 டிரோன்கள் குர்ஸ்க் மற்றும் தம்போவ் பகுதிகளிலும், ஒரு டிரோன் கிராஸ்னோடார் பகுதியிலும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....