காலி சிறைச்சாலையில் மோதல் : 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Date:

காலி சிறைச்சாலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற மோதலில் 4 பேர் காயமடைந்த நிலையில், பூஸ்ஸா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கரந்தெனிய சுத்தாவின் ஆதரவாளர்கள் மற்றும் வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் கஞ்சிபானி இம்ரானின் ஆதரவாளர்கள் குழுவிற்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்டியாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களும் காயமடைந்தவர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் மோதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....