ஆயிரம் யாகம் செய்த பலன் கிடைக்க

Date:

ஹோமங்கள் யாகங்கள் என்று கோவில்களிலும் வீட்டிலும் பலரும் செய்வது உண்டு. இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும், அவர்களுக்கு இருக்கக் கூடிய தோஷங்கள் விலக வேண்டும், கிரக சாந்தி ஏற்பட வேண்டும் என்றுதான். இன்னும் சிலரோ பொதுநலம் கருதி உலகம் நன்றாக இருக்க வேண்டும், மழை பெய்ய வேண்டும் என்று ஹோமமோ யாகமோ நடத்துவார்கள். இந்த ஹோமத்தையும் யாகத்தையும் வசதி மிக்கவர்களால் மட்டுமே தான் செய்ய முடியும். ஆனால் சாதாரணமாக ஒரு குடிசை வீட்டில் இருக்கக்கூடியவர்கள் கூட யாகம் செய்யக்கூடிய பலனை பெற வேண்டும் என்று நினைத்தால் மார்கழி வெள்ளிக்கிழமையை தவறவிடக்கூடாது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மார்கழி மாத வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்தால் ஆயிரம் யாகம் செய்ததற்குரிய பலன் கிடைக்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

நாமும் நன்றாக இருக்க வேண்டும், நம் குடும்பத்தில் இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும், யாருக்கும் எந்தவித குறையும் ஏற்படக்கூடாது, அனைத்து விதமான நலன்களையும் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான் நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம். அந்த வகையில் இறைவனிடம் வேண்டுவதோடு ஹோமம் வளர்ப்பது, யாகம் வளர்ப்பது போன்றவற்றை செய்தோம் என்றால் நம்மிடமோ, நம் வீட்டிலோ இருக்க கூடிய எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்குவதோடு தெய்வ சக்தியின் நடமாட்டம் வீட்டில் ஏற்படும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட யாகம் செய்வதற்கு சமமான பலனை பெறக் கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இந்த பரிகாரத்தை மார்கழி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று செய்வது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. இதை வசதி மிக்கவர்கள் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் கூட தெய்வத்தை முழுமனதோடு நம்பி இந்த யாகத்தை செய்யலாம். இதற்கு நமக்கு தேவைப்படக்கூடியது இரண்டே இரண்டு பொருட்கள்தான். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வீட்டின் மையப் பகுதியில் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கில் ஒரே ஒரு தர்ப்பை புல்லை வைத்து அதனுடன் பச்சை கற்பூரத்தையும் வைத்து எரிக்க வேண்டும். இது எரிந்து முடிந்த பிறகு இதிலிருந்து வரக்கூடிய வாசனை வீடு முழுவதும் பரவும். அதேபோல் எரிந்து முடிந்த பிறகு இதில் இருக்கக்கூடிய சாம்பலில் ஒரு சொட்டு நெய்யை விட்டு நன்றாக கலந்து நம்முடைய நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த முறையில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் நம்முடைய வீட்டில் செய்தோம் என்றால் ஆயிரம் யாகம் செய்ததற்குரிய பலன் கிடைக்கும். நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்கும். நமக்கு இருக்கக்கூடிய கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். தடைபட்டிருக்கக்கூடிய சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். வாழ்க்கையில் வெற்றிக்கும் மேல் வெற்றி உண்டாகும் என்று கூறிக் கொண்டே செல்லலாம்.

இந்த அற்புதமான எளிமையான பரிகாரத்தை முழு மனதோடு மார்கழி மாத வெள்ளிக்கிழமை அன்று செய்பவர்களுக்கு ஆயிரம் யாகம் செய்ததற்குரிய பலன் கிடைக்கும். அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....