தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மாற்றுப்பாதைக்கு அருகில் இன்று (21) ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 5ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாரவூர்தியுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




