நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய ,கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.
மேல்,சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா ,கண்டி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.




