சீதுவை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
சீதுவ வெலபட வீதியில் மகிழுந்தில் வந்த அடையாளந் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மூவர் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
இந்த மூவரில் 53 வயதுடைய நபர் ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்




