புது வருட பிறப்புக்கு இரண்டு நாள்களுள்ள நிலையில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு!

Date:

2025ஆம் புது வருடப் பிறப்புக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ளன.

புது வருடத்திற்காகப் பொதுமக்கள் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்வதற்கு அதிகளவில் பிரவேசிக்கின்றனர்.

இதன்போது, அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இவ்வாறான பின்னணியில் சந்தையில் பல்வேறு அசௌகரியங்களை நுகர்வோர் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை, தனியார் துறையினரால் இதுவரை 75,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தனியார் தரப்பினருக்கு அனுமதி வழங்க மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 32,000 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 43,000 நாடு அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....