கெப் வண்டி விபத்தில் 5 பேருக்கு காயம்

Date:

நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியின் மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் கெப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கெப் வண்டியில் வந்தவர்கள் நேற்று (29) ஸ்ரீபாதயில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் இன்று (30) கொடகவெல நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களே காயமடைந்துள்ளதாகவும், கெப் வண்டியில் 7 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 5 பேர் காயமடைந்து மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமானதால், டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நியூஸ்ரீ செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கெப் வண்டியில் பயணித்த குழந்தை மற்றும் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கெப் வண்டியின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து நேர்ந்ததாகவும், விபத்தில் கெப் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....