பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவிற்கு விண்ணப்பங்கள் கோரல்

Date:

பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி, 2024 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க, பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பல்வேறு துறைகளில் நிரூபிக்கப்பட்ட அறிவு, அனுபவம் மற்றும் கீர்த்தியுடன் பொதுவாழ்வில் மேன்மைமிக்கவர்களாக இருக்கும் நபர்களிடமிருந்து பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காகப் பரிந்துரைக்கப்படுவதற்கு அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களை கோரியுள்ளதாக பாராளுமன்ற செயலகம் குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்ற இணையத்தளத்தில் (www.parliament.lk) ‘பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ எனும் துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ளதற்கமைய தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் தகவல் படிவம் ‘அ’ இற்கு அமைவாகவும், பெயர் குறித்த நியமனங்கள் தகவல் படிவம் ‘ஆ’ இற்கு அமைவாகவும் தயாரிக்கப்பட வேண்டும்.

உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்/ பெயர் நியமனங்கள் 2025 ஜனவரி 20 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில்; அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, எனும் முகவரிக்கோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பப்படல் வேண்டும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....