காசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் 184 பேர் பலி

Date:

இஸ்ரேல் – காசாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நீண்டகாலமாக மோதல்போக்கு நிலவி வந்தது. இதனையடுத்து 2023-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பணய கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.இந்த போரில் இதுவரை சுமார் 45 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் அதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் வலியுறுத்துகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அதன்படி காசா மீது கடந்த 3 நாட்களில் 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசியது. இதில் 184 பேர் பலியாகி உள்ளனர். இந்தநிலையில் பணய கைதியாக உள்ள இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிய லிரி அல்பாக் (வயது 19) என்ற இளம்பெண் பேசும் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் சமீபத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் தன்னை மீட்க இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே பணய கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்ரேலிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....