இலங்கையைப் பொருத்தவரையில் மலையகத்தில் வறுமை அதிகரித்துக் கொண்டு செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சம்பளத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு வறுமை மலையகத்தில் நிலவவில்லை எனவும் அது பல்வகைத்தன்மையுடையது எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற அமர்வின் போது இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
இலங்கை என்ற தீவுக்குள்ளே இருக்கும் ஓர் தீவாக மலையகம் திகழ்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறினார்.
இலங்கையில் உள்ள மிகவும் பின்தங்கிய மக்களாக பெருந்தோட்ட மக்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கி வாழக்கூடிய மக்களாக பெந்தோட்ட மக்களை உணவு பாதுகாப்பு நிறுவனம் அடையாளப்படுத்தியுள்ளதாகவும் சபையில் சுட்டிக்காட்டினார்.
இதே போன்று இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் உலக செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையும் மலையக மக்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதை வெளிப்படுத்துவதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதனிடையே தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமாக 2,000 ரூபாயை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.




