மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில், வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் தாய், குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றிருந்தபோது இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும், கிணற்றுக்கு அருகிலுள்ள நாற்காலியில் ஏறிய பின்னர் குழந்தை கிணற்றில் விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.




