நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை 2,500 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அன்னத விஜேபால தெரிவித்துள்ளார். 

இதுவரையான காலப்பகுதியில் நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 1,200 ஆகக் காணப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், அவசர தேவைகள் நிமித்தம் வெளிநாடு செல்லவேண்டிய நிலையில், அதற்கமைய கடவுச்சீட்டுகளை வழங்குவதற்குத் தனியானதொரு கருமபீடம் நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த கருமபீடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர், அந்த நபருக்கு உடனடியாக கடவுச்சீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அன்னத விஜேபால தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....