காட்டு யானை இறப்பு தொடர்பில் வௌியான தகவல்

Date:

2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காட்டு யானைகளின் இறப்புகளைக் குறைப்பதற்காக திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் காட்டு யானைகளின் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிந்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 388 காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 488 ஆகவும் பதிவாகியிருந்தது.

கடந்த ஆண்டு கிழக்கு வனவிலங்கு வலயத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான யானைகள் உயிரிழந்தன, அதாவது 81.

இதேபோல், பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் 78 காட்டு யானைகளும், அனுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 53 யானைகளும், ஊவா வனவிலங்கு வலயத்தில் 43 யானைகளும் உயிரிழந்திருந்தன.

துப்பாக்கிச் சூட்டில் 84 யானைகளும், மின்சாரம் தாக்கி 56 யானைகளும், ஹக்கபடாஸ் சாப்பிடத்தில் 52 யானைகள் உட்பட உடலில் விஷம் சேறுதல் , ரயில் விபத்துகள், வீதி விபத்துகள் மற்றும் விவசாய கிணறுகளில் விழுதல் போன்ற பல்வேறு விபத்துகளால் காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில், காட்டு யானைகளின் தாக்குதலால் 155 மனித இறப்புகள் பதிவாகியுள்ளன.

கிழக்கு மற்றும் அனுராதபுரம் வனவிலங்கு வலயங்களிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் கடந்த சில நாட்களில் 16 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

இந்த இறப்புகளில் பெரும்பாலானவை துப்பாக்கி பிரயோகங்களினால் ஏற்பட்டதாகவும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....