அதிக விலைக்கு அரிசியை விற்று சிக்கிய வர்த்தகர்கள்

Date:

நாடு முழுவதும் மேலதிக குழுக்களை ஈடுபடுத்தி, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபையால் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என  நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டம், மாவனெல்ல, பேராதெனிய, கெலிஓயா, கம்பளை, உடபுஸ்ஸலாவ, நாவலப்பிட்டி, உலபனே, தென்னே கும்புர, குண்டசாலை, திகன மற்றும் கடுகன்னாவை உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் அரிசி வர்த்தகர்களை தேடி 05 மேலதிக குழுக்களை ஈடுபடுத்தி சுற்றிவளைப்பில் ஈடுபட்டதாக அந்த சபை தெரிவித்தது.

இதன்போது, அதிக விலைக்கு அரிசி விற்ற இரண்டு நிறுவனங்கள் உட்பட 25 வர்த்தகர்கள் மீது அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த சில நாட்களிலும் இன்றும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களால் 6.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....